< Back
மாநில செய்திகள்
நரிக்குறவர்கள் குடியிருப்பில் வீடுகளை சீரமைத்து கொடுத்த இசையமைப்பாளர் டி.இமான்
கடலூர்
மாநில செய்திகள்

நரிக்குறவர்கள் குடியிருப்பில் வீடுகளை சீரமைத்து கொடுத்த இசையமைப்பாளர் டி.இமான்

தினத்தந்தி
|
26 Sept 2023 12:15 AM IST

நரிக்குறவர்கள் குடியிருப்பில் உள்ள வீடுகளை இசையமைப்பாளர் டி.இமான் சீரமைத்து கொடுத்தார்.

நெய்வேலி,

நெய்வேலி அடுத்த பெரியாக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களது வீடுகள் சேதமடைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழைநீர் ஒழுகி வருகிறது. சமீபத்தில் மழை பெய்த போது, வீடுகளுக்குள் மழைநீர் ஒழுகுவதை அந்த பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் வீடியோ எடுத்து முகநூலில் பதிவிட்டார். இதை பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் ரூ.2 லட்சம் செலவில் வீடுகளின் கூரையை மாற்றி அமைத்தல், தார்ப்பாய் அமைத்தல் மற்றும் அங்குள்ள குழந்தைகளுக்கு இரவு நேர பாடசாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார்.

பின்னர்நேற்று முன்தினம் காலை அப்பகுதிக்கு இசையமைப்பாளர் டி.இமான் , அவரது மனைவியுடன் வந்து பார்வையிட்டு பாடசலை உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார். அப்பொழுது அங்கிருந்தவர்கள் இசையமைப்பாளர் இமானுக்கு பாசி மாலை அணிவித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, சென்னையை சேர்ந்த உமா செல்வம், நெய்வேலி ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்