< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழக பாஜகவின் வெளிநாடு,அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவராக இசையமைப்பாளர் தீனா நியமனம்
|3 Dec 2022 10:29 PM IST
தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இசையமைப்பாளர் தீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
நடிகை காயத்ரி ரகுராம் தமிழக பாஜக கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார்.
இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இசையமைப்பாளர் தீனா நியமிக்கப்பட்டுள்ளார். காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, அப்பதவிக்கு இசையமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத் தலைவராக ஆனந்தன் அய்யாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.