< Back
மாநில செய்திகள்
குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பூர்
மாநில செய்திகள்

குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தினத்தந்தி
|
30 Jun 2023 11:15 PM IST

கவுண்டச்சிபுதூர் ஊராட்சி பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை

தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாலசுப்பிரமணியம் நகர், மற்றும் அம்மாபட்டி, சமத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் முறையான குடிநீர் வழங்கவில்லை. எனவே முறையாக குடிநீர் வழங்கக்கோரியும், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பாலசுப்பிரமணியம் நகர் பகுதிக்கு காவிரி மற்றும் அமராவதி தண்ணீர் வருவதில்லை. இது சம்பந்தமாக ஊராட்சி தலைவரிடமும், செயலரிடம் ் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தண்ணீர் வருவதற்கான எந்த ஒரு வேலையும் செய்யவில்லை.

சமத்தூர் மற்றும் அம்மாபட்டி பகுதியில் மின் மோட்டார் கழட்டி ஆறு மாதமாகியும் இதுவரை மின் மோட்டாரை ஊராட்சி நிர்வாகம் பொருத்தி மக்களுக்கு தண்ணீர் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் நாங்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம்.

நடவடிக்கை

எனவே பாலசுப்பிரமணியம் நகர் மற்றும் சமத்தூர் பகுதிக்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். இல்லை எனில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்