< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது: சசிகலா
|30 July 2024 1:20 AM IST
அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சசிகலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"தி.மு.க. தலைமையிலான ஆட்சியில் ஒரே நாளில் 3 அரசியல் பிரமுகர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருவதை எனது பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் வாயிலாக இந்த விளம்பர அரசுக்கு தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் நிலையில், அதனை மெய்பிக்கும் வகையில் தற்போது அரசியல் பிரமுகர்கள் வெட்டி படுகொலை செய்யப்படுவது நாள்தோறும் அரங்கேறுகிறது.
இவற்றையெல்லாம் தடுப்பதற்கு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு, நாள் தவறாமல் நடைபெறும் படுகொலைகளை தடுக்க தவறிய தி.மு.க. தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.