< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
செல்போனுக்காக நடந்த கொலை.. போதையில் இளைஞர்களின் வெறிச்செயல் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

26 July 2023 8:43 PM IST
சென்னையில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்கள், மதுபோதையில் ஒருவரை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
வடசென்னை, காசிமேடு துறைமுக பகுதியில் 45 வயதுடைய நபர் ஒருவர், சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த சாமுவேல், சஞ்சய் என்ற இளைஞர்கள் மதுபோதையில் அந்த நபரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அப்போது, அவரிடம் இருந்து தப்பிப்பதற்கு, அவரை மதுபோதையில் கல்லால் அடித்து கொன்றதும் தெரியவர, இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.