< Back
மாநில செய்திகள்
நடத்தையில் சந்தேகப்பட்டு தாயை வெட்டிக்கொன்ற வாலிபர்
சிவகங்கை
மாநில செய்திகள்

நடத்தையில் சந்தேகப்பட்டு தாயை வெட்டிக்கொன்ற வாலிபர்

தினத்தந்தி
|
4 May 2023 12:15 AM IST

நடத்தையில் சந்தேகப்பட்டு தாயை வெட்டிக்கொன்ற வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள மடப்புரம் விலக்கு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சிவஞானம். இவரது மனைவி அருள்ஜோதி (வயது 45). கணவன், மனைவி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். எம்.ஜி.ஆர். நகர் பகுதி வீட்டில் அருள்ஜோதி தனியாக வசித்து வந்தார். சிவஞானம் திருப்புவனம் அடுத்த வில்லியாரேந்தல் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இவர்களுடைய மூத்த மகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இளைய மகன் விஷ்ணு பிரபு (19) தனது தந்தையுடன் வசித்து வருகிறார். மேலும் அவர் வில்லியாரேந்தலில் உள்ள தனியார் தென்னந்தோட்டத்தில் கூலிவேலை செய்்து வந்தார்.

இந்நிலையில் தனது தாயார் நடத்தையில் சந்தேகம் அடைந்த விஷ்ணுபிரபு நேற்று முன்தினம் இரவு அருள்ஜோதி வசித்து வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டு அரிவாளால் அருள்ஜோதியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விஷ்ணுபிரபு பூவந்தி போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுபிரபுவை கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்