< Back
மாநில செய்திகள்
நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

தினத்தந்தி
|
14 July 2023 12:45 AM IST

நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சீர்காழி நகர சபை தலைவராக இருப்பவர் துர்கா ராஜசேகரன். இளம் நகரசபை தலைவரான இவர் பாரம்பரிய கலைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தானே சிலம்பம் கற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது உள்ளிட்ட சமூக பணிகள் மேற்கொள்வதை பாராட்டி புதுச்சேரியில் கம்பன் கலையரங்கத்தில் நடந்த சமூக தலைவர்கள் மாநாட்டில் குளோபல் ஹியூமன் பீஸ் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக துணை வேந்தர் வெங்கடேசன் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். டாக்டர் பட்டம் பெற்ற நகரசபை தலைவரை, நகராட்சி ஆணையர் வாசுதேவன், துணைத் தலைவர் சுப்பராயன், கவுன்சிலர்கள் பாஸ்கரன், ராமு, கிருஷ்ணமூர்த்தி, வேல்முருகன், கஸ்தூரிபாய் செந்தில், நாகரத்தினம், செந்தில் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தி.மு.க. இளைஞரணி நகர அமைப்பாளர் ராஜசேகரன், தி.மு.க. வார்டு செயலாளர்கள் சக்திவேல், பாரூக் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்