< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
பொன்னேரியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய நகராட்சி தலைவர்
|17 July 2022 11:29 AM IST
டாக்டரான பொன்னேரி நகராட்சி தலைவர் பரிமளம் விஸ்வநாதன் கொரோனா தடுப்பூசி முகாமை துவங்கி வைத்து அவரே பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசின் பொது சுகாதாரத் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பொன்னேரி நகராட்சி பகுதியில் நேற்று பல இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
டாக்டரான பொன்னேரி நகராட்சி தலைவர் பரிமளம் விஸ்வநாதன் பொன்னேரி சிவன் கோவில் தெருவில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமை துவங்கி வைத்தார். பின்னர், அவரே பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தினார். அப்போது நகராட்சி ஆணையர் தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் அஷரப்முனிசகில், உமாபதி, தனுஷா தமிழ் குடிமகன், நல்லசிவம் உடன் இருந்தனர்.