< Back
மாநில செய்திகள்
பேரூராட்சி கூட்டம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

பேரூராட்சி கூட்டம்

தினத்தந்தி
|
27 April 2023 6:53 PM IST

கண்ணமங்கலம் பேரூராட்சி கூட்டம் நடந்தது.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற கூட்டம் இன்று பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தீர்மானங்களை இளநிலை உதவியாளர் வீரமணி வாசித்தார்.

இதில் துணைத்தலைவர் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கண்ணமங்கலம் பேரூராட்சியில் நிலுவையில் உள்ள பல்வேறு வரியினங்களை வசூலிப்பது.

பேரூராட்சி பகுதியில் அனைத்து தெருக்களில் உள்ள குழல்விளக்குகளை, பேரூராட்சி மண்டல உதவி இயக்குனர் அறிவுரைப்படி எல்.இ.டி. விளக்குகளாக மாற்றம் செய்ய பணி உத்தரவு வழங்குவது.

2021-22-ம் ஆண்டு பேரூராட்சி தணிக்கை அறிக்கைகளை சமர்ப்பிப்பது, 2022-2-3ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை உள்ளாட்சி நிதி தணிக்கை துறைக்கு அனுப்பவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
மேலும் செய்திகள்