< Back
மாநில செய்திகள்
பேரூராட்சி கூட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பேரூராட்சி கூட்டம்

தினத்தந்தி
|
12 April 2023 2:08 AM IST

திசையன்விளை பேரூராட்சி கூட்டம் நடந்தது.

திசையன்விளை:

திசையன்விளை பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் ஜான்சிராணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜெயக்குமார், செயல் அலுவலர் (பொறுப்பு) சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், குற்ற செயல்களை தடுக்க எம்.ஜி.ஆர். பஸ் நிறுத்தம், மணலிவிளை வடக்கு தெரு கூட்டுறவு வங்கி அருகில், இட்டமொழி ரோடு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது, புதிதாக 100 தெருவிளக்குகள் அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கிடையே, பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் அனைத்து பணிகளிலும் காலதாமதம் ஏற்படுவதாக கூறி நிரந்தர செயல் அலுவலரை உடனடியாக நியமிக்க வலியுறுத்தி பா.ஜனதா கவுன்சிலர் லிவ்யா கூட்டத்தை புறக்கணித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் வாயில் கருப்பு துணியை கட்டி இருந்தார்.

மேலும் செய்திகள்