தென்காசி
நகராட்சி கூட்டம்
|செங்கோட்டை நகராட்சி கூட்டம் நடந்தது
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி கூட்ட அரங்கில் வைத்து நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், மேலாளா் ரத்தினம், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்ற பட்டன. பின்னா் கூட்டஅரங்கில் புகையில்லா போகி குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சியில் நடந்தது. நிகழ்ச்சியில் போகி பண்டிகையில் கழிவு பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் எனவும், அந்த குப்பைகளை நகராட்சி சுகாதார பணியாளா்களிடம் ஒப்படைத்துவிடவும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கூட்டத்தில் உறுப்பினா்கள் சுப்பிரமணி, ஜெகன், முத்துப்பாண்டி, ராம்குமார், ராதா, இந்துமதி சக்திவேல், சுடர்ஒளி ராமதாஸ், பொன்னுலிங்கம், செண்பகராஜன், சரஸ்வதி, செல்வக்குமாரி, ரஹீம், இசக்கித்துரை பாண்டியன், மேரி, பேபி ரெசவுபாத்திமா, இசக்கியம்மாள் மணிகண்டன், சரவணக்கார்த்திலைக, பினாஷா, முருகையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.