< Back
மாநில செய்திகள்
நகராட்சி கூட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நகராட்சி கூட்டம்

தினத்தந்தி
|
1 Oct 2022 1:41 AM IST

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கூட்டம் நடந்தது

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சாதாரண கூட்டம், தலைவர் செல்வசுரேஷ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் திலகா சிற்றரசன், ஆணையாளர் கண்மணி, சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ், மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியவுடன் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கிறாஸ் இமாக்குலேட், வைகுண்டலட்சுமி ஆகியோர் தங்களது வார்டு பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்களும் பேசினர். பின்னர் நடந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்