திருவண்ணாமலை
பேரூராட்சி கூட்டம்
|கண்ணமங்கலம் பேரூராட்சி கூட்டம் நடந்தது.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் துணைத்தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள் விஜய், பாரத், சுகுணா, மணி உள்பட அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கண்ணமங்கலம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பழுதடைந்துள்ள சிறு மின் விசைப்பம்புகள் சீரமைக்கவும்,
2021-22-ம் ஆண்டு 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் பணிகள் செய்யவும், ரூ.9.34 லட்சம் மதிப்பில் சாலை, கால்வாய் பணிகள் செய்யவும், ராமகிருஷ்ண உடையார் தெருவில் பழுதடைந்த சமுதாய கழிப்பறையை ரூ.2½ லட்சம் மதிப்பில் புனரமைப்பு செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் இளநிலை உதவியாளர் வீரமணி நன்றி கூறினார்.