< Back
மாநில செய்திகள்
கடையநல்லூர் நகராட்சி கூட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

கடையநல்லூர் நகராட்சி கூட்டம்

தினத்தந்தி
|
30 Jun 2022 6:04 PM IST

கடையநல்லூர் நகராட்சி கூட்டம் நடந்தது

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சி சாதாரண கூட்டம், தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகராட்சி துணைத்தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார ஆய்வாளர் சக்திவேல், சிவா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கடையநல்லூர் விசாலாட்சி ஊருணியை ரூ.45½ லட்சத்திலும், திருமால்விழுங்கி ஊரணியை ரூ.29.20 லட்சத்திலும், அட்டக்குளம் ஊருணியை ரூ.61.51 லட்சத்திலும் தூர்வாரி மேம்படுத்துவது. மலம்பாட்டை ரோட்டில் உள்ள மயானத்தில் ரூ.1 கோடியே 47 லட்சத்து 80 ஆயிரம் செலவில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்