< Back
மாநில செய்திகள்
பேரூராட்சி கூட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பேரூராட்சி கூட்டம்

தினத்தந்தி
|
2 Jun 2022 9:18 PM IST

தேன்கனிக்கோட்டையில் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை பேரூராட்சி கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேவராஜன் ஏரியில் உள்ள ஆழ்துளை கிணற்றை சுற்றி 10 அடி உயரத்திற்கு கான்கிரீட் மேடை அமைப்பது, பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது, பேரூராட்சியில் உள்ள தெருவிளக்குகளை ரூ.28 லட்சம் மதிப்பில் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றுவது என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த தீர்மானங்கள் அனைத்தும் பெரும்பாலான கவுன்சிலர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்