< Back
மாநில செய்திகள்
பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு

தினத்தந்தி
|
12 May 2023 12:15 AM IST

தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

தியாகதுருகம்,

தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த சீனிவாசன் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஈரோடு மாவட்டம், சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த கண்ணன், தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டார். இதைதொடர்ந்து தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக கண்ணன் பொறுப்பேற்று கொண்டார். அப்போது அவருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, துணைத்தலைவர் சங்கர், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்