< Back
மாநில செய்திகள்
மணலியில் பிணமாக மீட்கப்பட்டவர்: மாநகராட்சி பெண் தூய்மை பணியாளரை கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம் - மாயமானதாக நாடகமாடிய கணவர் கைது
சென்னை
மாநில செய்திகள்

மணலியில் பிணமாக மீட்கப்பட்டவர்: மாநகராட்சி பெண் தூய்மை பணியாளரை கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம் - மாயமானதாக நாடகமாடிய கணவர் கைது

தினத்தந்தி
|
9 Aug 2022 10:44 AM GMT

மணலியில் பிணமாக மீட்கப்பட்ட மாநகராட்சி பெண் தூய்மை பணியாளரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மாயமானதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர் பூங்காவனபுரம் 1-வது தெருவில் வசித்து வருபவர் மணிமாறன் (வயது 35). இவருடைய மனைவி மைதிலி (34). இவர், சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தனது மனைவியை காணவில்லை என திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் மணிமாறன் புகார் செய்தார். இதற்கிடையில் மணலி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே மைதிலி உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது கணவன் மணிமாறனை பிடித்து விசாரித்தனர். அதில் அவரே தனது மனைவியை கொன்று விட்டு, மாயமானதாக நாடகமாடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் மணிமாறன் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

என் மனைவி மைதிலிக்கும், அவளுடன் வேலை பார்க்கும் சக ஊழியரான ஜெய்சங்கருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை சம்பவத்தன்று நேரில் பார்த்த நான், என் மனைவியிடம் அதுபற்றி கேட்டேன். அதற்கு அவள் அலட்சியமாக பதில் சொன்னாள். இதனால் ஆத்திரமடைந்த நான், அவளை மணலி புதிய மேம்பாலம் கட்டப்படும் இடத்துக்கு அழைத்துச்சென்று கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அருகில் கிடந்த துணி மூட்டைகளை எடுத்து அவளது உடல் மீது போட்டு மூடிவிட்டு வந்து விட்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்