தென்காசி
பன்னோக்கு மருத்துவ முகாம்
|ஆலங்குளம் அருகே பன்னோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆலங்குளம்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆலங்குளம் அருகே நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த இந்த முகாமை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் (பயிற்சி) கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் வரவேற்று பேசினார். வருவாய்த்துறை கோட்டாட்சியார் லாவண்யா, ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் வாழ்த்தி பேசினர். சுகாதாரத்துறை துணை இயக்குனர் முரளிசங்கர், இணை இயக்குனர் பிரேமலதா ஆகியோர் முகாமில் உள்ள திட்டங்களை பற்றி விளக்கி பேசினர்.
முகாமில் தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். முகாமில் நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி, ஆயுர்வேத மருத்துவர் ஹரிஹரன், யோக மருத்துவர் நீலவேணி, மேகலா மற்றும் சிறப்பு மருத்துவர்கள், தொழிலதிபர் மணிகண்டன், அரசு ஒப்பந்ததாரர் மாரித்துரை மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் நெட்டூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆறுமுகம் நன்றி கூறினார்.