< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 119 அடியாக சரிந்தது
|3 March 2023 12:15 AM IST
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர் பாசன ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 28-ந்தேதி 120.20 அடியாக இருந்தது. நேற்றைய நிலவரப்படி 119.75 அடியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 48 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 467 கன அடி வெளியேற்றப்படுகிறது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததாலும், தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறையத்தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.