திருச்சி
பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேர்த்திருவிழாவிற்கு முகூர்த்தக்கால்
|பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேர்த்திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
துறையூர்:
துறையூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் ேதர்த்திருவிழா அடுத்த மாதம்(ஜூன்) 4-ந் தேதி ெதாடங்கி நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருவிழாவின் முதல் நாளான வருகிற 4-ந் தேதி காலை பெருமாள்மலை மேல் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு துவஜாரோகணமும், அன்றிரவு அன்ன வாகனத்தில் பெருமாள் வீதி உலாவும் நடைபெற உள்ளது. 5-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் சிம்ம வாகனத்திலும், 6-ந் தேதி காலை மற்றும் இரவில் அனுமந்த வாகனத்திலும், 7-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் சேஷ வாகனத்திலும், 8-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் கருட வாகனத்திலும், 9-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் யானை வாகனத்திலும் பெருமாள் வீதி உலா நடக்கிறது. 10-ந் தேதி காலை பல்லக்கில் பெருமாள் வீதி உலாவும், அன்று மதியம் திருக்கல்யாண வைபவமும், இரவில் இந்திர விமானத்தில் பெருமாள் வீதி உலாவும் நடைபெகிறது. 11-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் குதிரை வாகனத்திலும் பெருமாள் வீதி உலா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந் தேதி காலை தீர்த்தவாரி மற்றும் இரவில் சத்தாவரணம் நடைபெறுகிறது. 14-ந் தேதி காலை திருமஞ்சனம் மற்றும் இரவில் ஆளும் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ் செய்து வருகிறார்.