< Back
மாநில செய்திகள்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
கரூர்
மாநில செய்திகள்

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
29 July 2023 11:44 PM IST

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மகாஅபிஷேக குழு சார்பில் 25-ம் ஆண்டு ஆடி தெய்வ திருமண விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நால்வர் அரங்கில் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிக்கும், அலங்காரவள்ளி, சவுந்திரநாயகி அம்பாளுக்கும் ஆடி தெய்வ திருமண விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு நேற்று கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி முகூர்த்தக்கால் எடுத்துக்கொண்டு ஏராளமான பெண்கள் மலர் தட்டு, முளைப்பாரி, முகூர்த்தப்பட்டு மற்றும் மங்களபொருட்களுடன் கோவிலில் வலம் வந்தனர். தொடர்ந்து மேளதாளம் முழங்க முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்