< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
சப்தரிஷீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா
|18 March 2023 3:08 AM IST
சப்தரிஷீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.
லால்குடி:
லால்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு பங்குனி தேரோட்டத்திற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் பூர்வாங்க பூஜைகள் செய்யப்பட்டு, தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதையடுத்து வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி ேதர்த்திருவிழா தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் வருகிற ஏப்ரல் 3-ந் தேதி நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.