< Back
மாநில செய்திகள்
முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானி கந்தூரி விழா
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானி கந்தூரி விழா

தினத்தந்தி
|
15 Nov 2022 12:15 AM IST

ராமநாதபுரத்தில் முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானி கந்தூரி விழா நடைபெற்றது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பாசிப்பட்டறைதெரு முஸ்லிம் ஜமாத் சார்பில் நபிகள் நாயகம் பிறந்ததின மீலாது விழா மற்றும் முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானி நினைவு கந்தூரி மற்றும் மவுலிது விழா ஜமாத் டிரஸ்டி காதர் முகைதீன் தலைமையில் நடைபெற்றது. நிர்வாக டிரஸ்டி அசரப் அலி, டிரஸ்டிகள் காதர், உஸ்மான் அலி, ஜபருல்லா, சைரூஸ் அலி, செய்யது அபுதாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதரசா ஆசிரியர் சம்சுதீன் ஆலிம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். பாடகர் சீனி முகமது இஸ்லாமிய கீதம் பாடினார். தலைமை இமாம் அப்துல்காதர் வரவேற்றார். ராமநாதபுரம் நகர் வட்டார உலமா சபை தலைவர் முகமது யாசின், சேலம் தலைமை இமாம் முகமது இப்ராஹிம் ஆகியோர் பேசினர்.

கந்தூரி விழாவையொட்டி ஆயிரக்கணக்கானோருக்கு நெய் சோறு அன்னதானம் வழங்கப்பட்டது. மவுலிது நிகழ்ச்சியில் ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் இமாம்கள், ஆலிம்கள், உலமாக்கள், ஜமாத் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மவுலவி சேக் அப்துல் காதிர் உலக நன்மைக்காக பிரார்த்தனை துவா ஓதினார். முடிவில் துணை இமாம் அன்வர் அலி நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்