< Back
மாநில செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
திருச்சி
மாநில செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
8 April 2023 2:31 AM IST

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை தேர் திருவிழா வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியேற்றம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக காலையில் கோவில் கொடிமரம் முன்பு முகூர்த்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணியக்காரர் பழனிவேல், கண்காணிப்பாளர் ஸ்டாலின்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்