தஞ்சாவூர்
அதிராம்பட்டினத்தில், மண்பானை விற்பனை மும்முரம்
|ேகாைட வெயில் சுட்ெடரிப்பதால் அதிராம்பட்டினத்தில் மண்பானை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதில் ஒரு பானை ரூ.100 முதல் 200 வரை விற்கப்படுகிறது.
அதிராம்பட்டினம்;
ேகாைட வெயில் சுட்ெடரிப்பதால் அதிராம்பட்டினத்தில் மண்பானை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதில் ஒரு பானை ரூ.100 முதல் 200 வரை விற்கப்படுகிறது.
கோடை வெயில்
தஞ்ைச மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகலில் வெளியே செல்லும் மக்கள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள். காலை 8 மணிக்கு தொடங்கும் கோடை வெப்பம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. வீடுகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளதால் மின்விசிறி இல்லாமல் தூங்க முடியாத நிலை உள்ளது. நாள்முழுவதும் மின்விசிறி சுழன்று கொண்டே இருப்பதால் மின்கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.வெயில் சுட்டெரிப்பதால் நுங்கு, இளநீர், தர்பூசணி, சர்பத் விற்பனை அதிகரித்துள்ளது.
குளிர்ந்த குடிநீர்
அதிராம்பட்டினத்தில் ஏழைகளின் ஐஸ் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும், மண்பானை விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது.கோடையில், குடிநீரை, குளிர்ச்சியாக வைக்க, தற்போதும் அதிராம்பட்டினம் மற்றும் கிராமங்களில் பெரும்பாலானோர் மண்பானையை பயன்படுத்தி வருகின்றனர்.குளிர்சாதன பொருட்களின் வசதியால், மண்பானையின் பயனை மக்கள் மறந்து விட்டனர். ஆனால் மண்பாண்டங்களை விற்பனை செய்வோர் இன்றும் கோடை காலங்களில், மண்பானை விற்பனையை ஆர்வத்துடன் செய்கின்றனர்.
பக்கவிளைவுகள் குறைவு
இயற்கையான மண்பானைகளில் இருந்து குளிர்ந்த நீரை பருகும் போது பக்கவிளைவுகள் குறைவு. இதனால் பழமையை மறக்காத வாடிக்கையாளர்கள் மண்பானைகளை வாங்கி செல்வதில் ஆர்வம் காட்டுகிறாா்கள். இதில் சிறிய மண்பானைகள் ரூ.100 முதல் ரூ.150 வரையும் பெரிய மண் பானைகள் ரூ.200 முதல் ரூ.250 வரையும் விற்கப்படுகிறது.அதிராம்பட்டினம் பகுதில் கோடை வெயில் அதிகரிக்க தொடங்கி விட்டதால், கிழக்கு கடற்கரை சாலை ரோடு, சின்ன மார்க்கெட், பெரிய மார்க்கெட், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பானை விற்பனையும் சூடு பிடித்துள்ளது.
மண் கிடைப்பதில் சிரமம்
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
நாங்கள், மண்பானைகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறோம். பானைகளை பாதுகாப்பது, மிகவும் சிரமம். ஏதாவது ஒன்று உடைந்து விட்டால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடும். இந்த தொழில் பொங்கல் பண்டிகையின் போதும், அதன் பின் கோடைகாலத்திலும் விறு விறுப்பாக இருக்கும். மழைக்காலத்தில் எங்களுக்கு போதிய அளவு வருமானம் இருக்காது. மண்பானை செய்ய மண் கிடைப்பதில் அதிக சிரமம் உள்ளது. வெயில் காலத்தில், மண்பானையில் இருந்து தண்ணீரை எடுத்து குடிப்பது ஐஸ் தண்ணீரை குடிப்பது போல குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் அதிக வாடிக்கையாளா்கள் மண்பானைகளை வாங்கி செல்கிறாா்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.