< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
உத்திரமேரூர் அருகே கோவில் கட்டுமான பணியின்போது முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
|6 April 2023 3:21 PM IST
உத்திரமேரூர் அருகே கோவில் கட்டுமான பணியின்போது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாத்தனஞ்சேரி கிராமத்தில் கரிய மாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ரூ.93 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பணிகள் நடந்து வருகிறது. வழக்கம் போல நேற்று காலை கட்டுமான பணியாளர்கள் கோவில் அருகே தொட்டி கட்டுவதற்காக சுமார் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டினர். அப்போது பள்ளத்தின் ஒரு புறத்தில் பானை வடிவில் முதுமக்கள் தாழி தென்பட்டது.
இதையடுத்து வருவாய்துறையினருக்கும் அரசு அலுவலர்களுக்கும் கோவில் பணியாளர்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அரசு அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.