< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
சங்கராபுரம் அருகே மண் கடத்தல்; வாகனங்கள் பறிமுதல்
|6 July 2023 12:15 AM IST
சங்கராபுரம் அருகே மண் கடத்தல் தொடா்பாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூக்கனூர் அனந்தாங்கல் ஏரியில் 3 பேர் 2 டிராக்டர்களில் கடத்துவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். இதைபார்த்த போலீசார், அங்கு விரைந்து சென்று, மண் கடத்தியதாக புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த டிரைவர்கள் மணிகண்டன் (வயது 25), சிவா (25), உலகுடையாம்பட்டை சேர்ந்த மாதேஷ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாகனங்களின் உரிமையாளர்கள் மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி, மதியழகன், பன்னீர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.