< Back
மாநில செய்திகள்
எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மாநில செய்திகள்

எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தினத்தந்தி
|
14 Dec 2023 7:24 PM IST

மக்கள் பிரதிநிதிகளின் குரலை நசுக்குவது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளின் மீதான வெளிப்படையான தாக்குதலாகும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சென்னை,

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

திமுக-வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட15 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது;

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு மீறல் குறித்து கேள்வி எழுப்பும் மக்கள் பிரதிநிதிகளின் குரலை நசுக்குவது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளின் மீதான வெளிப்படையான தாக்குதலாகும்.

மத்திய அரசு சகிப்புத்தன்மையற்ற போக்கை கைவிட்டு, எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும். என தெரிவித்துள்ளார் .

மேலும் செய்திகள்