< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு என்ற வார்த்தையில் உருவான கோலத்தை பகிர்ந்து கனிமொழி எம்.பி. பொங்கல் வாழ்த்து
மாநில செய்திகள்

'தமிழ்நாடு' என்ற வார்த்தையில் உருவான கோலத்தை பகிர்ந்து கனிமொழி எம்.பி. பொங்கல் வாழ்த்து

தினத்தந்தி
|
13 Jan 2023 10:26 PM IST

‘தமிழ்நாடு’ என்ற வார்த்தையில் உருவான கோலத்தை கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'தமிழ்நாடு' என்ற வார்த்தையில் உருவான கோலத்தை அவர் பகிர்ந்துள்ளார். இந்த கோலம் பலரையும் கவர்ந்துள்ள நிலையில், இதனை வடிவமைத்துக் கொடுத்தவருக்கு கனிமொழி எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்