ம.பி: குனோ தேசியப் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலிகளில் மேலும் ஒன்று உயிரிழப்பு!
|சாஷா, உதய் என்ற இரு சிவிங்கி புலிகள் உயிரிழந்த நிலையில் மூன்றாவதாக தக்ஷா என்ற சிவிங்கி புலியும் உயிரிழந்துள்ளது.
போபால்,
இந்தியாவில் சீட்டா எனப்படும் சிவிங்கிப்புலி இனத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் நமீபியா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் இருந்து மேற்படி விலங்குகளை இந்தியா பெற்று உள்ளது. நமீபியாவில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 8 சிவிங்கிப்புலிகளும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 12 சிவிங்கிப்புலிகளும் கொண்டு வரப்பட்டன.
நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகள், சிறப்பு சரக்கு விமானம் மூலம் இந்தியாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்டன. அவற்றை மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி திறந்துவிட்டார்.
மேலும் 12 சிவிங்கிப் புலிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்டன. இவ்வாறு 20 சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன.
இந்த நிலையில் சாஷா, உதய் என்ற இரு சிவிங்கி புலிகள் உயிரிழந்த நிலையில் மூன்றாவதாக தக்ஷா என்ற சிவிங்கி புலியும் உயிரிழந்துள்ளது.