படுக்கை வசதி பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
|படுக்கை வசதி பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
குறிப்பிட்ட சில ரெயில்களில் படுக்கை வசதி பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட படுக்கை வசதி பெட்டிகள், குறிப்பிட்ட சில நகரங்களுக்கிடையே முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.
* கன்னியாகுமரி-புனே (வண்டி எண்: 16382) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 15-ந்தேதி முதல் கன்னியாகுமரி-எர்ணாகுளம் இடையே எஸ்-5 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.
* மங்களூரு-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் (22638) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 19-ந்தேதி முதல் ஈரோடு-எம்.ஜி.ஆர் சென்டிரல் இடையே எஸ்-11 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.
எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ்
* எழும்பூர்-கொல்லம் (16723) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 19-ந்தேதி முதல் நெல்லை-கொல்லம் இடையே எஸ்-10, எஸ்-11 படுக்கை பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.
* கொல்லம்-எழும்பூர் (16724) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 20-ந்தேதி முதல் கொல்லம்-நெல்லை இடையே எஸ்-11 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.
* எம்.ஜி.ஆர் சென்டிரல்-மங்களூரு (22637) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற அக்டோபர் மாதம் 19-ந்தேதி முதல் எம்.ஜி.ஆர் சென்டிரல்-சேலம் இடையே எஸ்-4 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.
ராமேசுவரம், மங்களூரு எக்ஸ்பிரஸ்
* எழும்பூர்-ராமேசுவரம் (16851) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதி முதல் மானாமதுரை-ராமேசுவரம் இடையேவும், ராமேசுவரம்-எழும்பூர் (16852) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 26-ந்தேதி முதல் ராமேசுவரம்-மானாமதுரை இடையேவும் எஸ்-12, எஸ்-13 படுக்கை பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இயக்கப்படும்.
* எழும்பூர்-மங்களூரு (16159) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் திருச்சி-மங்களூரு இடையே எஸ்-10 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.
* மங்களூரு-எழும்பூர் (16160) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் மங்களூரு-திருச்சி இடையே எஸ்-7 பெட்டியும், மங்களூரு-கரூர் இடையே எஸ்-8, எஸ்-9, எஸ்-10 படுக்கை பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இயக்கப்படும்.
தூத்துக்குடி - மைசூரு
* தூத்துக்குடி-மைசூரு (16235) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் தூத்துக்குடி-மதுரை இடையே எஸ்-10, எஸ்-11 படுக்கை பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.