< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தசரா விழா: மலையேற்ற வீராங்கனை சந்தோஷ் யாதவுக்கு ஆர்.எஸ்.எஸ். அழைப்பு
|16 Sept 2022 1:10 AM IST
தசரா விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க மலையேற்ற வீராங்கனை சந்தோஷ் யாதவுக்கு ஆர்.எஸ்.எஸ். அழைப்பு விடுத்துள்ளது.
புதுடெல்லி,
ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஆண்டுதோறும் தசரா விழா மிகவும் முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம். நாக்பூரில் நடக்கும் விழாவில், ஆர்.எஸ்.எஸ். தலைவர், முக்கிய பிரச்சினைகளை பற்றி பேசுவதுடன், இயக்கத்தின் செயல்திட்டத்தையும் விளக்குவார்.
இவ்விழாவில், ஏதேனும் ஒரு துறையின் முக்கிய பிரபலம், சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் சமீப ஆண்டுகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்தநிலையில், நடப்பாண்டு தசரா விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க மலையேற்ற வீராங்கனை சந்தோஷ் யாதவுக்கு ஆர்.எஸ்.எஸ். அழைப்பு விடுத்துள்ளது. அவர் எவரெஸ்ட் சிகரத்தில் 2 தடவை ஏறிய முதல் பெண்மணி ஆவார். மேலும், ஆர்.எஸ்.எஸ். தசரா விழாவில் பங்கேற்கும் முதலாவது பெண் சிறப்பு விருந்தினரும் அவரே ஆவார்.