< Back
மாநில செய்திகள்
நீலகிரி மலைப்பாதையில் திடீர் மண் சரிவு - குன்னூர் மலை ரெயில் சேவை பாதிப்பு
மாநில செய்திகள்

நீலகிரி மலைப்பாதையில் திடீர் மண் சரிவு - குன்னூர் மலை ரெயில் சேவை பாதிப்பு

தினத்தந்தி
|
15 Nov 2022 6:38 PM IST

மலைப்பாதையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் சுமார் ஒரு மணி நேரம் மலை ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி அடர்லி பகுதியில் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே உள்ள மலை ரெயில் பாதையில் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற மலை ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து ரெயில் பாதையில் சரிந்து கிடந்த மண் மற்றும் பாறைக்கற்களை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, மலை ரெயில் உதகைக்கு புறப்பட்டது.

மேலும் செய்திகள்