கள்ளக்குறிச்சி
கட்டணம் வசூல் செய்ய ஊழியர்கள் இல்லாததால் இலவசமாக பயணித்த வாகன ஓட்டிகள்
|உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ய ஊழியர்கள் இல்லாததால் இலவசமாக பயணித்த வாகன ஓட்டிகள்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நேற்று 22-வது நாளாக நீடித்தது. இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சுங்கச்சாவடியில் வானங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பணி மற்றும் படிப்பு நிமித்தமாக சென்னையில் தங்கி இருக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பயணித்ததால் சுங்கச்சாவடியில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இங்கு இரு மார்க்கங்களிலும் மொத்தம் 10 நுழைவு பகுதிகள் உள்ளன. இதில் 4 நுழைவு பகுதிகளில் மட்டுமே கட்டணம் வசூல் செய்யும் பணியில் ஊழியர்கள் இருந்தனர். மீதமுள்ள 6 நுழைவு பகுதிகளிலும் ஊழியர்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். ஆனால் வெகுநேரமாகியும் கட்டணம் வசூல் செய்ய யாரும் வராததால் பொறுமையை இழந்த வாகன ஒட்டிகள் கட்டணம் செலுத்தாலேயே பயணித்தனர். ஊழியர்கள் அமர்ந்திருந்த நுழைவு பகுதியில் நின்ற வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து கட்டணம் செலுத்தி சென்றதால் மிகவும் சிரமப்பட்டனர்.