< Back
தமிழக செய்திகள்
கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
அரியலூர்
தமிழக செய்திகள்

கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

தினத்தந்தி
|
2 July 2023 12:00 AM IST

கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் மாலை நேரத்தில் படுத்து கொள்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்