< Back
மாநில செய்திகள்
திருத்தணி மேட்டு தெருவில் தானியங்கி ரெயில்வே கேட் பழுதால் வாகன ஓட்டிகள் அவதி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி மேட்டு தெருவில் தானியங்கி ரெயில்வே கேட் பழுதால் வாகன ஓட்டிகள் அவதி

தினத்தந்தி
|
21 Aug 2023 3:52 PM IST

திருத்தணி மேட்டு தெருவில் தானியங்கி ரெயில்வே கேட் பழுதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

ரெயில்வே கேட் பழுது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மேட்டுதெருவில் முதலாவது தானியங்கி ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக அரசு ஆஸ்பத்திரி, அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சந்து தெரு, கீழ் பஜார், ஜோதிநகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் கடந்து செல்ல வேண்டும். தானியங்கி ரெயில்வே கேட்டை முறையாக பராமரிக்காததால் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இந்த நிலையில் நேற்று மேட்டு தெருவில் உள்ள தானியங்கி ரெயில்வே கேட் பழுது ஏற்பட்டது.

வாகன ஓட்டிகள் அவதி

தகவல் அறிந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் பல மணி நேரம் போராடி ரெயில்வே கேட்டை சரி செய்தனர்.தானியங்கி ரெயில்வே கேட் பழுது காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்தனர். சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆபத்தான முறையில் கேட் கீழே தள்ளி கடந்து சென்றனர்.

இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ரெயில்வே நிர்வாகம் இனிவரும் காலங்களிலாவது தானியங்கி ரெயில்வே கேட்டை முறையாக பராமரித்து பழுது ஏற்படாமல் பார்த்துகொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

மேலும் செய்திகள்