< Back
மாநில செய்திகள்
சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
திருவாரூர்
மாநில செய்திகள்

சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

தினத்தந்தி
|
18 Jun 2023 12:15 AM IST

நீடாமங்கலம் நகரில் தார்ச்சாலை அமைப்பதற்காக ஜல்லிகள் பெயர்க்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் முதல் தஞ்சை வரை நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நீடாமங்கலத்தில் சாலையின் இருபுறமும் வடிகால் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. நீடாமங்கலம் நகரில் தார்ச்சாலை அமைப்பதற்காக ஜல்லிகள் பெயர்க்கப்பட்டுள்ளது. இதனால் நீடாமங்கலம் வழியாக தினமும் செல்லும் வாகனங்களால் சாலையில் புழுதி பறந்து புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், நீடாமங்கலம் வர்த்தகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே புழுதி பறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்