< Back
மாநில செய்திகள்
திருக்கழுக்குன்றம் பகுதியில் மாடுகள் சாலையில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் அவதி; பேரூராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

திருக்கழுக்குன்றம் பகுதியில் மாடுகள் சாலையில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் அவதி; பேரூராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
6 Dec 2022 4:43 PM IST

திருக்கழுக்குன்றம் பகுதியில் மாடுகள் சாலையில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம், மார்க்கெட், பஜார் வீதி ஆகிய பகுதிகளில் மாடுகள் அதிகளவில் சாலையில் சுற்றி திரிவதால் விபத்துகள் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே வருவதால் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் விபத்துகளில் மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் திருக்கழுக்குன்றம் பகுதி மீன் மார்க்கெட் பகுதியில் கன்றுகுட்டி மீது கனரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்து குறிப்பிடத்தக்கது. திருக்கழுக்குன்றம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பேரூராட்சி சார்பில் கட்டுப்படுத்தவும், சாலையில் கால்நடைகளை திரிய விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் செய்திகள்