< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
திருப்போரூர் ஒன்றியத்தில் சாலைகளில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
|22 Aug 2023 4:44 PM IST
திருப்போரூர் ஒன்றியத்தில் சாலைகளில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
திருப்போரூர் ஒன்றியத்தில், ஓ.எம்.ஆர். சாலை, திருப்போரூர்-செங்கல்பட்டு சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை, இள்ளலூர் சாலை உள்ளன.
போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த, அரசும் மாவட்ட நிர்வாகமும் அவ்வப்போது தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருப்பினும் சாலை, பஸ் நிறுத்தம் பகுதிகளில் மாடுகள் படுத்திருந்தும், சாலையில் திடீரென எழுந்து ஓடுவது வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதில்லை. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.