< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
வாகன ஓட்டிகள் அவதி
|12 Sept 2023 1:28 AM IST
தஞ்சையில் குப்பைத்தொட்டியில் இருந்து வெளியேறிய புகையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தஞ்சை சீனிவாசபுரம் சிங்கபெருமாள் குளத்தின் கரை பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது.குப்பைகளை அவ்வப்போது சிலர் தீயிட்டு எரிக்கின்றன. இதனை தடுக்கும் விதமாக குளத்தின் கரை பகுதியில் ஆங்காங்கே குப்பைத்தொட்டி வைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று குப்பையை எரிப்பதற்காக குப்பைத்தொட்டிக்குள் தீ வைத்துள்ளனர். இதனால் குப்பைத்தொட்டியில் இருந்து புகை வெளியேறியது. இதன்காரணமாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிங்கபெருமாள் குளம் பகுதியில் குப்பைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.