< Back
மாநில செய்திகள்
பர்கூர் ரோடு வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்குரங்குகளுக்கு உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டாம்;வனத்துறையினர் வேண்டுகோள்
ஈரோடு
மாநில செய்திகள்

பர்கூர் ரோடு வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்குரங்குகளுக்கு உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டாம்;வனத்துறையினர் வேண்டுகோள்

தினத்தந்தி
|
24 May 2023 2:25 AM IST

பர்கூர் ரோடு வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குரங்குகளுக்கு உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

அந்தியூர்

பர்கூர் ரோடு வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குரங்குகளுக்கு உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

பர்கூர் ரோட்டில்...

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் ரோட்டில் ஏராளமான குரங்குகள் காணப்படுகின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள், அங்கு சாலையோரம் உட்கார்திருக்கும் குரங்குகளுக்கு பழங்கள், வடை போன்ற உணவுப்ெபாருட்களை கொடுக்கின்றனர்.

இந்த பொருட்களை வாங்க குரங்குகள் வரும்போது அவைகள் ஒன்றோடொன்று சண்டையிட்டு கொள்கின்றன. மேலும் உணவுப்பொருட்களை கொடுக்கும்போது, அதை வாங்க ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு தாவி குதித்து ரோட்டை கடக்கின்றன. அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. ஒரு சில குரங்குகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றன.

வீசப்படும் உணவுப்பொருட்கள்

மேலும் பர்கூர் ரோடு வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை சாலையோரம் நிறுத்தினால், குரங்குகள் ஓடிச்சென்று அந்த வாகனங்களின் மீது ஏறி உட்கார்ந்து ஏதாவது உணவுப்பொருட்கள் கொடுக்கிறார்களா? என சுற்றும் முற்றும் பார்க்கிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் உணவுப்பொருட்களை சாலையோரத்தில் நிற்கும் குரங்குகளுக்கு கொடுக்கிறார்கள். சிலர் உணவுப்பொருட்களை வீசி செல்கிறார்கள். அவ்வாறு வீசப்படும் உணவுப்பொருட்களை எடுக்க ரோட்டை கடக்கும் குரங்குகள் விபத்தில் சிக்குகின்றன. எனவே குரங்குகள் விபத்தில் சிக்காமல் இருக்க பர்கூர் ரோட்டில் செல்பவர்கள் உணவுப்பொருட்களை வழங்க வேண்டாம்.

நோய் தாக்கும் அபாயம்

வனப்பகுதியில் குரங்குகளுக்கு தேவையான பழங்கள் போன்ற உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. அவைகள் வனப்பகுதியில் இரை தேடி தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை தின்றுவிடும். எனவே உணவுப்ெபாருட்களை கொடுத்து குரங்குகளை சோம்பேறி ஆக்கக்கூடாது. மேலும் செயற்கையாக செய்யப்பட்ட வடை போன்ற உணவுப்பொருட்களை கொடுப்பதால், குரங்குகளை நோய் தாக்கும் அபாயம் ஏற்படும்.

எனவே குரங்குகளின் நலன் கருதி, பர்கூர் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள், தாங்கள் கொண்டு வரும் உணவுப்பொருட்களை கொடுக்கவோ அல்லது சாைலயோரம் வீசவோ வேண்டாம்,' என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்