கள்ளக்குறிச்சி
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தொழிலாளி பலி
|உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி மகன் காண்டீபன் (வயது 45). தொழிலாளி. இவர் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் முருகன் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டையில் இருந்து குன்னத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாண்டூர் கிராமம் அருகே சென்றபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் களமருதூர் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் மகன் நிருத்தீஸ்வரன் (19) என்பவர் வெட்னி அர்ஜுன் மகள் ஏஞ்சல் (19) என்பவரை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்தார். இதில் கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காண்டீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் முருகன் மற்றும் நிருத்தீஸ்வரன், ஏஞ்சல் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து காயமடைந்த 3 பேரும் சிசிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நிருத்தீஸ்வரன் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.