< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 5 பேர் படுகாயம்
அரியலூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 5 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
1 Oct 2023 12:00 AM IST

ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் இலையூர் கிராமத்திற்கு வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுரேஷ் மற்றும் எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த குவாகம் வெட்டித்தெருவை சேர்ந்த சூர்யா (18), அவரது மோட்டார் சைக்கிளில் வந்த அதே ஊரை சேர்ந்த மணி மனைவி சிந்தாமணி (22), அவரது மகள் அட்சயா (1), ஐயம்பெருமாள் மனைவி யசோதை (52) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்