< Back
மாநில செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே         மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; 2 பேர் பலி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; 2 பேர் பலி

தினத்தந்தி
|
26 Oct 2023 12:15 AM IST

உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உளுந்தூர்பேட்டை,

நேருக்குநேர் மோதல்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஏழுமலை (வயது 36), விவசாயி. இவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நண்பரான அதேஊரை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் உ.நெமிலி கிராமத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை ஏழுமலை ஓட்டினார்.

உளுந்தூர்பேட்டை அடுத்த நெமிலி கூட்டுரோடு அருகே வந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், ஏழுமலை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

2 பேர் பலி

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சக்திவேல் மற்றும் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கூவாடு கிராமத்தை சேர்ந்த பெரியசாமி(36), சிவா ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து விபத்தில் சிக்கிய சக்திவேல் உள்ளிட்ட 3 பேரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பெரியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சக்திவேல், சிவா ஆகியோா் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்