< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் மோதல்:  தனியார் நிறுவன ஊழியர் பலி
தேனி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தனியார் நிறுவன ஊழியர் பலி

தினத்தந்தி
|
13 Aug 2022 7:45 PM IST

தேவதானப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியா் பலியானார்

தேவதானப்பட்டி கோட்டையன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிரி பாலா (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். நேற்று இரவு இவர், தேவதானப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டுக்கு தனது நண்பரை பார்க்க சென்று கொண்டிருந்தார்.

பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் மீனாட்சிபுரம் விலக்கு அருகே சென்றபோது வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானல் நோக்கி சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது 2 பேரும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து கீழே விழுந்தனர். இதில் கிரி பாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த சுரேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்