< Back
மாநில செய்திகள்
புதுப்பேட்டை அருகேமோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; வாலிபர் படுகாயம்
கடலூர்
மாநில செய்திகள்

புதுப்பேட்டை அருகேமோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; வாலிபர் படுகாயம்

தினத்தந்தி
|
13 May 2023 12:15 AM IST

புதுப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார்.

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே கட்டியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் மணிபாரதி (வயது 18). சம்பவத்தன்று இவர் பண்ருட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அம்மாப்பேட்டை சாலையில் வந்தபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், மணிபாரதி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த மணிபாரதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்