கடலூர்
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; வாலிபர் சாவு 2 பேருக்கு தீவிர சிகிச்சை
|மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; வாலிபர் சாவு
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை கருணாநிதி சாலை தெருவை சேர்ந்தவர் பூராசாமி. இவரது மகன் அஜித்குமார் (வயது 27). இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் பரங்கிப்பேட்டையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பரங்கிப்பேட்டை பெரிய மதகு பகுதியில் அவர் வந்த போது, எதிரே வந்த அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்த, நடராஜன் மகன் நாகராஜன் (25), அவரது நண்பரான ராஜதுரை மகன் ரவிவர்மன் (25) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
சாவு
இதில் 3 பேரும் கீழே விழுந்தனர். இதையடுத்து, சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையே அஜித்குமார் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அஜித் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். நாகராஜன், ரவிவர்மன் ஆகியோர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.