< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் படுகாயம்
|19 Oct 2023 8:08 PM IST
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வாலிபர் படுகாயமடைந்தார்.
திருவள்ளூர் அடுத்த காரனை கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 28). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். திருப்பாச்சூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கார்த்திகேயன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயனுக்கு தலை மற்றும் காலில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.