திருவள்ளூர்
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் படுகாயம்
|திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
திருத்தணி அடுத்த தெக்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32). இவர் திருத்தணியில் உள்ள தனியார் கார் ஷோரூமில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் ஆனந்த் வேலை முடிந்ததும் திருத்தணியில் இருந்து தெக்ளூர் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் அமிர்தாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆனந்த் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆனந்தை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.