< Back
மாநில செய்திகள்
ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் பலி
கடலூர்
மாநில செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் பலி

தினத்தந்தி
|
27 Feb 2023 12:15 AM IST

ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உயிாிழந்தாா்.

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீநெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 64). அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் ஹரிஹரன் (வயது 18). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஹரிஹரன், தனது சகோதரி விடுதலை செல்வியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆதிவராகநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஹரிஹரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விடுதலை செல்வி காயமின்றி உயிர் தப்பினார். படுகாயமடைந்த ஹரிஹரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஹரிஹரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்